அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, February 12th, 2024

தனது இந்திய விஜயத்தின் “தொலைநோக்கு அறிக்கை”யின் பிரகாரம்  இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை,  சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால்  400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   

இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை  நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய  தொடர்புகளை  மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதிசெய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன்  மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

NPCI International Payments Limited  மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எலிசபெத் மாகாராணியின் இறுதிச் சடங்கிற்காக உலக தலைவர்கள் இலண்டன் வருகை – பல இராஜதந்திர நடவடிக்கைகளில்...
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை - 13 ஆவது திருத்தமும் இறுதித் தீர்வுமில்லை - ஜனாதிபதி ரணில் வ...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்கள...