வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: மழைக்குச் சாத்தியம்

Tuesday, September 25th, 2018

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உண்டு என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் 100 மில்லிமீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: