வளப் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினர் !

Wednesday, March 21st, 2018

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு குருதி வங்கி ,உத்தியோகத்தர்களுக்கான தங்கும் விடுதி ஆகியன உடனடியாகத் தேவைப்படுவதாக தென்மராட்சி பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் சாவச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேரிக்கை முன்வைத்;தனர்

இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் மேலும் தெரிவிக்கையில் எமது வைத்தியசாலையிலிருந்து கழிவுகளை உரிய முறையில் அகற்றுவது பெரும் பிரச்சினையாக உள்ளது குறிப்பாக புதைக்கம் கழிவுகளை நாய்கள் தோண்டி எடுத்து விடுகின்றது .அதனால் சுகாதார பிரச்சினைளளை எதிர் நோக்க வேண்டியுள்ளது

இது தொடர்பாக நகர சபையினரிடம் பல தடவைகள் முறையிட்டும் வைத்திய சாலை வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை எமது வைத்தியசாலைக் கழிவுகளை உரிய முறையில் அகற்றவதற்குரிய நவீன வசதிகள் ஏற்படுத்தபட வேண்டும் .

இயக்கச்சி தொடக்கம் நாவற்குழி வரையுள்ள பகுதிகளில் விபத்துக்குள்ளாகுபவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலைக்கே சிகிச்சைக்கு வருகின்றனர் வைத்தியசாலையில் கருதி வங்கி இல்லாத காரணத்தால் விபத்துக்குள்ளானவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது

சாவகச்சேரி பரந்த பகுதியை மையப்படுத்திய பிரதேசம். ஆகவே எமது வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சாவகச்சேரி அதார வைத்தியசாலையில் கடமையாற்ற விருப்பம் தெரிவிப்பதில்லை காரணம் அதிக வேலைப்பளு அத்துடன் வேறு பிரதேச உத்தியோகத்தர்கள் தங்கி நின்று பணியாற்றுவதற்காக விடுதி வசதிகளும் இல்லை

இதனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்ற பின்னடிக்கின்றனர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு தனிப்பட்டரீதியாக பெரியளவில் எந்தவொரு அனுசரணைகளும் கிடைக்கப் பெறுவதில்லை ஆனால் ஏனைய வைத்தியசாலைகளுக்கு இவ்வாறான தனிப்பட்ட உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன எமது வைத்தியசாலைக்கு ஓரு நாளைக்கு 750 நோயாளிகள் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெறுகின்றார்கள் அவர்களல் 100 பேர் அளவில் நோயாளர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்

ஆனால் 16 வைத்தியர்களே கடமையாற்றுகின்றனர் எமது வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் பற்றாக்கறைளும் நிலவுகின்றது எனத் தெரிவித்தனர்.

Related posts: