வல்வெட்டித்துறை நகரசபையையும் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது தமிழரசுக் கட்சி!

Tuesday, March 27th, 2018

வல்வெட்டித்துறை நகரசபைக்கான அதிகாரத்ததையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் குறித்த சபைகளின் ஆட்சி பொறுப்பை அமைக்க அந்தந்தப் பிரதேசங்களில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சிகள் உரிமை கோரியிருந்த நிலையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் தெரிவு நடைபெற்று வருகின்றது

இதன் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபை நகரபிதாவுக்கான பலப்பரீட்சை இன்று பிற்பகல் நடைபெற்றது.இதில் கறித்த நகரசபைக்கான அதிகாரத்ததை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

17 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த நகரசபையில் 6 ஆசனங்கள் சுயேட்சைக்குழு 4 அசனங்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்கள் மற்றும் இதர கட்சிகள் 5 உறுப்பினர்கள் என பெற்றிருந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில் குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: