வல்லமை மிக்க தலைவர்களை தமிழ் மக்கள் பலப்படுத்தி பயன்பெற வேண்டும் – K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிறீசுதர்சன் வலியுறுத்து!

Saturday, May 18th, 2024

தூய்மையான அக்கறையுடன் தமிழ் மக்களை சரியான திசைவழி நோக்கி வழிநடத்தவல்ல திறமையும், தூர நோக்குள்ள கொள்கையும் உடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னும் நல் வழிகாட்டியை கொண்டுள்ள வடக்கின் மக்களாகிய நாம் எமது தேவைகளையும் பிரச்சினைகளையும் அவரிடம் நேரில் எடுத்துச்சொல்லி சுலபகாக தீர்வை காணமுடியும்.

ஆனால் எமது மக்களது செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் இருக்கின்ற தளும்பல்கள் அல்லது இருக்கின்ற சுயநலன்களால் அவரை பலப்படுத்தி பயன்பெறுவதில் தவறிழைத்து வருகின்றோம்

ஆனால் இனிவருங்காலங்களில் தத்தமது குறுகிய நலன்களுக்காக அரசியல் செய்யும் சாதுரியமற்றவர்களின்  சிந்தனைகளை கைவிட்டு ஜதார்த்த பூர்வமான வகையில் சிந்தித்து எமது அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டுமாயின் வல்லமையுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்தி எமது அபிலாசைகளில் வெற்றிபெற வேண்டும்  என K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிறீசுதர்சன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த நிறுவனமானது நிலக்கடலை உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் ஏற்றுமதி செய்யக் கூடிய வகையிலான ஜம்போ நட்ஸ் (பதப்படுத்திய நிலக்கடலை) உற்பத்தியை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் நிரந்தர காணி மற்றும் கட்டடப் பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் (17.05.2024) குறித்த நிறுவனத்திற்கு நேரில் சென்று நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த கலந்துரையாடலின்போது உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்திருந்த நிறுவத்தின் தலைவர் சிறீசுதர்சன் மேலும் கூறுகையில் –

குறிப்பாக விவசாயத்தை பொறுத்தளவில் முக்கியம் வாய்ந்த மாவட்டமான கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் இந்த K2 அக்றோ நிறுவனம் (கச்சான்) நிலக்கடலை உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பதப்படுத்திய நிலக்கடலையை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றது

ஆரம்பத்தில் சுமார் 30 விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிலையமானது தற்போது 500 விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் பரிணாமித்து அதன் இலக்கில் பாரிய வெற்றிகண்டுள்ளது.

ஆனாலும் நிறுவனத்தின் இலக்கு வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 1000 நிலக்கடலை விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான கட்டமைப்பைக் கொண்டதாக உருவாக்குவதே ஆகும்

ஆனால்  இத்தகைய நோக்குடன் பரிணமித்துள்ள எமது நிறுவனம் அதன் செயற்பாடுகளில் நிரந்தர காணி மற்றும் கட்டடம் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

எனவே எமது நிறுவனத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக கொண்டியக்குவதற்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுக்கொள்வதற்கு ஓர் இடம் தேவையாக உள்ளது.

அந்தவகையில் எமது நிறுவனத்திற்கு ஒரு காணி நிலத்தைபெற்றுத்தரும் ஏதுநிலைய உருவாக்கி தாருங்கள். என அமைச்சரிடம் கோரியிருந்தனர்.

மேலும் உற்பத்திகள் மற்றும் மூலப்பொருள் கொள்வனவில் இருந்துவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் நிறுவனத்தின் தலைவர் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.

குறித்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான முன்னேற்றங்களை கருத்தில் கொண்ட அமைச்சர்  எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: