வலி வடக்கில் 147 வருட பாரம்பரிய பாடசாலை அழியும் நிலையில் ௲ மீட்டுத்தருமாறு கல்விப் புலத்தினர் கோரிக்கை!

Monday, September 7th, 2020

வலி வடக்கு மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை (ஆர்.சி.ரி.எம்.எஸ்) அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் அதனை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்விப்புலம் சார்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.

147  வருட கல்விப் பாரம்பரியத்தை கொண்ட பாடசாலை இடப் பெயர்வின் பின் யாழ் ஆனைப்பந்தியில்  அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான நாற்சார் வீட்டிலே  பல வருடங்களாக குறித்த பாடசாலை இயங்கி வருகிறது

சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றியே மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பாடசாலை நடத்தும் பகுதி  சுகாதார ஏற்பாடுகள் போதாது எனவும் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர்

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் குறித்த கட்டடத்திலிருந்து பாடசாலையை அகற்றுமாறு உரிமையாளரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.குறித்த பாடசாலை இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர்  குறித்த பாடசாலைச் சமூகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் அவர்கள் செய்வதறியாது சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே தமது பாடசாலை தொடர்ந்தும் இயங்க கூடிய வகையில் மாற்று வழி ஒன்றை பெற்று கொடுப்பது கல்விப்புலம் சார்ந்தோரின் பொறுப்பாக உள்ளது என்றும்  கல்விப்புலம் சார்ந்தோர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: