வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, January 10th, 2019

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒருதொகுதி முன்பள்ளிகளுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு தேவைகளுக்கான உதவிப் பொருட்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இணுவில் பொதுநூலக பாலர் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளி நிலா முன்பள்ளி, பாரதி முன்பள்ளி, சிறிமுருகபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் நிர்வாகத்தினர் தமது தேவைப்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பொது அமைப்புகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகத்தினர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த அமைப்புகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் கொண்டுசென்றதன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பிரகாரம்

இணுவில் பொதுநூலக பாலர் பாடசாலை சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளி நிலா முன்பள்ளிக்கு குடிநீர் குளாய்க் கிணறு அமைத்தல் மற்றும், மின்சார இணைப்பு, பாரதி முன்பள்ளிக்கு தளபாடங்கள், சிறிமுருகபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு கட்டட புனரமைப்பிற்காக ஒருலட்சம் ரூபா நிதி உதவியும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உதவித் திட்டங்களை கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன், கட்சியின் வலிகாமம் பிரதேச உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் ஆகியோர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

02

03

04

01

Related posts: