வற் வரி தொடர்பாக இன்று ஜனாதிபதி – பிரதமர் பேச்சு!

Monday, July 4th, 2016

வற் வரி திருத்தம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இன்று மாலை இந்த முக்கியமான சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

இந்த சந்திப்பு நடத்தப்பட முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனைத்து வர்த்தக சங்கங்களினதும் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு நிதி அமைச்சில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

வற் வரி விதிக்கப்படாத வர்த்தகர்களும் வெற் வரியின் பெயரைப் பயன்படுத்தி பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாக அண்மையில் ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார். பொதுமக்கள் மீது அதிகளவு சுமையை திணிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் வற் வரியில் செய்யக் கூடிய திருத்தங்கள் தொடர்பில் ஜானதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Related posts: