வறட்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இராணுவ உதவி – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Saturday, October 8th, 2016

 

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவத்தினர் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற பகுதிகளில் நீரி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொலன்னருவை மற்றும் மெதகிரிய போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சி காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் வழங்கி வரும் உதவியால் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் அன்றாடம் தேவையான நீரினை பெற்றுக்கொள்ள முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20121219-062307


மாவையின் தாயார் மறைவு; டக்ளஸ் தேவானந்தா அனுதாபம்
முல்லை. கட்டுக்கரைக்குளம் புனரமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கின்றது - ...
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
தபால் மூல வாக்களிப்பு 22 ஆம் திகதி ஆரம்பம்!
தேசிய பாடசாலைகளில் பணி புரியும் கல்வி சாரா ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பில் மீள்பரிசிலனை தேவை!