வர்த்தக நிலையத்தில் பாரிய தீ – காத்தான்குடியில் சம்பவம்!

Tuesday, November 3rd, 2020

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

காலை 10.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பொலிசாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அப்பகுதி மக்கள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியிரந்ததுடன் மட்டக்களப்புகாத்தான்குடி பிரதான பாதையை மூடிய பொலிசார் போக்கு வரத்திற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: