வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Friday, September 24th, 2021

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிமுதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேநேரம் அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

000

Related posts: