வரும் 23ஆம் திகதி கச்சத்தீவு அந்தோனியார் ஆலயம் திறப்பு!

Sunday, December 11th, 2016

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்பட உள்ளது.

இந்த ஆலயத்தின் திறப்பு விழா டிசம்பர் 7ம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து திறப்பு விழா திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இலங்கை கடற்படை அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், டிசம்பர் 23ம் திகதி புதிய தேவாலயத்தை கடற்படையினர் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வும், ஆலயத் திறப்பு விழாவும் நடைபெற இருப்பதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜெயரெத்தினம் தெரிவித்தார்.

253694306Untitled-1

Related posts: