சீரற்ற காலநிலை – 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

Wednesday, December 26th, 2018

சில தினங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 ஆயிரத்து 803 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 517 பேர் 30 இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளினால் சமைத்த உணவு வழங்கப்படுகிறதுடன், சுகாதார சேவை மற்றும் ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது. எனவே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் அதிகளவானோர் நாளை தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தின் ஆங்கில தின விருதுவழங்கும் நிகழ்வு!
சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்...