வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
Thursday, January 25th, 2024
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
தேர்தல் தொடர்பான நகர்வுகள் இரண்டாம் பட்சமானவைதான். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்;
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை!
பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...
|
|
|


