வரி அறவீடு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அனுமதி!

Tuesday, February 1st, 2022

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீதம் வரி தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பான யோசனை இந்த ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: