வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

Thursday, November 24th, 2022

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடைமுறைப்படுத்தும் எழுத்தாளர் ஊக்குவிப்பு வட்டத்தை உருவாக்கும் நோக்கில் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவரும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் விண்ணப்பப் படிவங்களை தங்களது பிரதேச கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்பாக பிரதிப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, செம்மணி வீதி, நல்லூர் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: