வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு!

Tuesday, February 28th, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  இன்று திங்கட்கிழமை(27) காலை-10 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற காவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள்  ‘வேலை கொடு…வேலை கொடு…உடனடியாக வேலை கொடு! ‘, நல்லாட்சி என்று காட்டிக் கொள்ளும் அரசே! எங்களின் நிலை என்ன?’  போன்ற பல்வேறு பதாதைகளையும் தாங்கி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி கடந்த காலங்களில் மத்திய, மாகாண அரசுகளுக்குப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்த போதும் தமக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்தனர்

023

Related posts: