வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து விசனத்தை ஏற்படுத்தினார் மாவை !

Thursday, September 22nd, 2016

வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து விசனத்தை ஏற்படுத்தினார் மாவை சேனாதிராஜா.

இச்சம்பவம் இன்று பிற்பகல் மருதங்கேணிக் கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கடந்த 1995ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் நாகர்கோவில் மகா வித்தியாலயப் பகுதியில் புக்கார விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல்களை மேற்கொண்ட சமயம் 22 பாடசாலை மாணவ மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர். அதன் 21வது ஆண்டு நினைவு தினமும் இன்றாகும்.

image-0-02-07-d843a6b060273b1155edd6a9ff2df492b48d252385db1cecb62645ffc254df83-V

அத்துடன் 7.5 மில்லியன் ரூபா செலவில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட (பி.எஸ்.டி.ஜி) நிதியில் கட்டப்பட்ட  புதிய மாடிக்கட்டடத் திறப்பு நிகழ்வும் இன்று இடம்பெறத் திட்டமிடப்பட்டு, அந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாணக் கல்வியமைச்சர் குருகுலராஜாவும் சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனும் கௌரவ விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளரும் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரியும் கலந்து கொள்வதாக இருந்தது.

அத்துடன் முன்னாள் போராளிகள் கட்சியின் தலைவர் ஜெயந்தனும் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சி சரியாக 2.00 மணிக்கு ஆரம்பமாவதாகவும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் அனைவரும் 1.50 மணிக்கே வந்து விட்டனர். ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பமாகாமல் விருந்தினர்களை அழைத்துச் செல்லும் பாண்ட் வாத்தியக் கருவி அணிகளின் மாணவிகளும் கால் கடுக்க காத்து நின்றிருந்தனர்.

image-0-02-07-d843a6b060273b1155edd6a9ff2df492b48d252385db1cecb62645ffc254df83-V

ஏன்? தாமதம் என வினாவியபோது முன்னாள் போராளிகள் கட்சியின் தலைவர் ஜெயந்தன் அழைக்கப்பட்டதால் மாவையார் தானும் வரவேணும் எனத் தெரிவித்து,  அதிகாரிகளிடம் நிகழ்ச்சியைத் தாமதமாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவையர் 2.40 மணிக்கு வந்தார். அதன் பின்னரே தேசியக் கொடியை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரனும் கலந்துகொண்டார்.

Related posts: