வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 27th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வடமராட்சி வடக்கு பிரதேசத்தின் பல பொது அமைப்புகளுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வடமராட்சி பிரதேசத்தின் பொது அமைப்புகளான புலோலி சிங்கநகர் விடிவெள்ளி மாதர்சங்கம், போதராமடம் அம்மன் சனசமூக நிலையம், கெருடாவில் கிழக்கு மாதர் அபிவிருத்தி சங்கம், பருத்தித்துறை சென்.அந்தோனி தேவாலயம், தொண்டமானாறு விக்னேஸ்வரா ஏடகம் விளையாட்டுக் கழகம், வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், சுப்பர்மடம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியன தமது அமைப்புகளின் வளப்பற்றாக்குறை குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பொது அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த பொது அமைப்புகளின் தேவைக்கான தளபாடங்கள் விளையாட்டு உபகரணங்கள் கடற்றொழில் உபகரணங்கள் போன்ற உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் புற்றளை இளைஞர் கழகம் மற்றும் சனசமூக நிலையத்திற்கு கட்டட புனரமைப்பிற்காக ஒரு இலட்ச நிதி உதவியும், பருத்தித்துறை கொட்டடி துள்ளுமீன் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு இலட்ச நிதி உதவியும், பொலிகண்டி மானாங்கனை  திருமகள் முன்பள்ளி  புனரமைப்பிற்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது பிரதேச செயலர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  மற்றும் குறித்த பிரதேசங்களின் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

46916754_362352557848723_2197566256616308736_n 46965345_373584613377346_2812535509602009088_n 46843986_1902614443107436_1348565176269406208_n 46837107_376117176482171_1916489397604188160_n 46782265_2072783616121673_6175389937664262144_n 46762618_558384614610153_5055974976172064768_n 46760237_334206664028968_5174998097721294848_n 46754943_1902062469889629_3610777425199235072_n 46648920_200455490880510_2628186833128783872_n 46976883_2266578943416488_1126514624036864000_n

Related posts: