வடபகுதி கடற்றொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் சிறந்த பொறிமுறை வேண்டும் – கடற்றொழில் அமைச்சரிடம் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் கோரிக்கை!

Thursday, March 18th, 2021

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறும் ஏனைய பகுதி மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுவரும் எமது பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களது எதிர்காலம் தொடர்பில் சிறந்ததொரு சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பதற்கு பொறிமுறை ஒன்று உருவாக்கித்தரப்பட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கூறுகையில் –

நீண்டகாலமாக எமது கடற்றொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைமீறிய, அத்துமீறிய, சட்டவிரோத செயற்பாடுகளே இவர்களை அதிகம் பாதித்து வருகின்றது.

இந்நிலையில் எமது கடற்படையினரும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சில துர்ப்பாக்கிய நிலைகளும் ஏற்பட்டுள்ளன. இதை காரணம் காட்டி தற்போது மேலும் பல பிரச்சினைகளை எமது கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் எமது கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான ஒரு தீர்ரவை பெறுவதற்கான சிறந்த ஒரு பொறிமுறையை உருவாக்கவது அவசியம் என்றும் தெரிவித்திருந்தார். குறித்த யோசனையை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பிலி  விரைவாக பேச்சுக்களை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதனூடாக இந்த கடற்தொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்கக்ப்படும் என்றும்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: