தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் – அமைச்சர் சாகல !
Wednesday, October 18th, 2017
தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சாகல ரத்யனாக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி வரை இந்த சட்டத்தின் கீழ் 106 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 74 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 40 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை 25 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறினார்
Related posts:
விஷேட வைத்திய நிபுணர்களது ஓய்வு பெரும் வயதெல்லை நீடிப்பு!
யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் - இராணுவ தளபதி எச்சரிக்கை!
|
|
|


