காணாமல் போனோர் விவகாரம்:  அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருகின்றது – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Thursday, January 26th, 2017

காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா தபால் அலுவலகம் முன்னிலையில் கடந்த 3 நாட்களாக காணாமல் போனோர் தொடர்பில் உறவுகள் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும் இல்லை. இவ்வாறான நிலையில் காணாமல் போனோரின் உறவுகளின் கோரிக்கை குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை காணாமல் போனதாக கூறப்பட்ட ஒருவர் 28 வருடங்களின் பின்னர் உறவுகளிடம் திரும்பியுள்ளார். காணாமல் போனதாக முன்னர் கூறப்பட்ட இவருக்கு மரணசான்றிதழ் அரசாங்கம் அளித்திருந்தால் தற்பொழுது இவருக்கு பிறப்பு சான்றதழ் அல்லவா வழங்கவேண்டியிருக்கும் என்று அமைச்சர் சுட்க்காட்டினார்.

எனவே இந்த விடயம் சிக்கலானதாகும். காணாமல் போனோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

08dc380c33ca2565b97c76c6fe59eb30_XL

Related posts:

தென்னிந்திய தொலைக்காட்சி நாடகம் பார்த்து பொய்யுரைத்தேன்: குற்றம் செய்த சிறுவன் பொலிஸ் விசாரணையில் த...
5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க...
வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்...