வடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்!
Wednesday, June 22nd, 2016வடமாகாண மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர தெரிவித்தார்.
வடமாகாணத்தில் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர்பாக உயர் மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த சனிக்கிழமை(18) யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண மாணவர்கள் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் வெற்றிகளைக் கண்டு வந்தாலும் அவர்களின் தேசிய மட்ட விளையாட்டுக்கள் கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டு ஒக்டோபர், செப்ரம்பர் மாதங்களில் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் விளையாட்டுச் செயற்பாடுகளில் மாணவர்களின் இன்றைய நிலைமைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்எதிர்காலத்தில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக மட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாகவும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
Related posts:
|
|