வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயாராது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, April 29th, 2021

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயார் இலட்சுமணன் மகேஸ்வரியின் பூதவுடலுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

அன்னார் வயது மூப்பின் காரணமாக நேற்றையதினம் (28) கொழும்பில் காலமானார். இந்நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு இன்றையதினம் (29) மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது: யாழ்.மேல் நீதிமன்ற  நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை ...