வடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகள் நடமாடும் சேவை ஊடாக விற்பனை!

Monday, January 14th, 2019

 

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவியுடன் நடத்தப்படும் இந்த விற்பனை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.

யாழ். நகரை அண்டிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் இந்த நடமாடும் விற்பனை சேவைகள் இடம்பெறுகின்றன. தற்காலத்தில் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற உக்காத மூலப்பொருட்களில் செய்த பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

இதனால் சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இவற்றை இயன்றளவு மக்கள் தவிர்த்துக் கொள்ளவே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: