வடக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தே முன்னெடுத்து வருகின்றோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, April 2nd, 2021

வடபகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கான செயற்றிட்டங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து முன்னெடுக்கவே நான் விரும்பகின்றேன் என தெரிவித்துள்ள. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வடபகுதிக்கு இன்றையதினம் வருகைதந்திருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து முல்லைத்தீவு ஐயன்குளம் பொலிஸ் நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக திறந்தவைத்திருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் இலஞ்சம் ஊழல் இல்லாத சமூகத்தை கட்டியெழுப்பும் அதேவேளை சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல்கொடுமைகள் மற்றும் போதைவஸ்து பாவனை விற்பனை ஆகியவற்றை இல்லாதொழிக்க வேண்டும் என்பதுடன் மக்கள் பயம், சந்தேகம் இல்லாத நிம்மதியான கொளரவமான பாதுகாப்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்காகவே தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்து சேவையாற்றிவரும் ஒரு மூத்த தமிழ் அரசியல் தலைவர். அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றார்.

அந்தவகையில் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளும்  வகையில் அமைச்சரவை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

அதுமாத்திரமல்லாது வடக்கு மாகாணத்தில் வளங்கள் சூறையாடப்படுகின்றமை உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் மக்கள் நாளாந்தம் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். அவ்வாறான குற்றச் செயல்களை தடுப்பதற்கும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தரவும் நாம் தயாராக இருக்கின்றோம்.

இதனிடையே வடபகுதியில் பொலிஸ் சேவையில் தமிழ் பெண்களை  உள்வாங்கும் அரசின் நிலைப்பாட்டுக்கு அமைவாக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுவருகின்றன.

அந்த அடிப்படையில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதனூடாக தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதனூடாக பெண்களுக்கெதிரான குற்றங்களுடன் சமூகவிரோத செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: