வடக்கு கிழக்கிற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்!

Saturday, July 13th, 2019

நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புதிய திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் குறித்த பகுதிகளில் புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறை அபிவிருத்திக்காக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு ,தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related posts:

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்த...
மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜாங்க அமைச்சர் இந்தி...
குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,...