வடக்கில் 249 ஆசிரிய வெற்றிடங்களுக்கான நியமனம் நாளை!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் 249 ஆசிரிய வெற்றிடங்களுக்கு நாளை நியமனம் வழங்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்பப் பாடங்களுக்கான 440 வெற்றிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்காக 360 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் போட்டிப் பரீட்சை இன்றி நேரடியாக நேர்முகப் பரீட்சை இடம்பெற்றது.
இதில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 160 பட்டதாரிகளும் ஏனைய பாடங்களில் 89 பேருமாக மொத்தம் 249 பேர் மட்டுமே இனங்காணப்பட்டனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மாத ஆரம்பத்தில் நியமனம் வழங்க முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் வரவு – செலவுத் திட்ட நிறைவேற்றம் தொடர்பில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு அனுமதியின் பெயரில் குறித்த நியமனம் வழங்கப்படுகின்றது.
Related posts:
|
|