வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் – வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தடை !

Monday, January 18th, 2021

மறு அறிவித்தல்வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச் சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருதனார்மட கொத்தணியில் இருந்து தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்ட பொதுச்சந்தைகளை இன்றுமுதல் மீளவும் பழைய இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா அபாயம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த சந்தைகள் இன்றையதினம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மீள திறக்கப்பட்டன.

மேலும் இன்றுமுதல் திருமண மண்டபங்களை திறக்கவும், 150 பேருடன் திருமணங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: