வடக்கின 9 இடங்கள் கொரோனா தொற்றின் ஆபத்துள்ள பகுதிகளாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா தொற்றின் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாணத்தில் ஒன்பது பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் உடுவில், யாழ் மாநகரசபை பகுதி, கரவெட்டி, வேலணை போன்ற பகுதிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, கண்டாவளை போன்ற பகதிகளும், மன்னார் மாவட்டதில் மன்னார் நகர்புற பகுதியும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர்புற பகுதியும், முல்லைத்தீவு மாவட்டதில் முல்லைத்தீவு நகர்புற பகுதியும் அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த அலகு ஒரு வரைபடத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|