வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ’; தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சிசெய்த மாகாணசபையின் ஆழுமையற்றதும் தூரநோக்கற்றதுமான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இன்றுவரை வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக பின்னிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு காரணம் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையிவல் –
இந்த பின்னடைவுக்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு மட்டுமே. இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும், ஆசிரியர்கள் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தியிருந்தேன்.
கல்வி முகாமைத்துவம் என்பது மாகாணத்தின் விடயமாகும். அதனை இவர்கள் செய்யாது விட்டுவிட்டு ஒவ்வொரு நொண்டிச் சாட்டுகள் கூறிக்கொண்டு இருப்பதில் பயனில்லை. மாகாணசபை விட்டதவறின் விளைவுதான் இன்றுவரை வடக்கு மாகாணம் கல்வியில் பின்னடைவில் தொடர காரணமாகியுள்ளது.
மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வியமைச்சராக வந்தவர்கள் தத்தமது குடுமிச் சண்டைகளை மேம்படுத்தி வந்தார்களே தவிர கல்வியை முன்னேற்ற எதுவித வேலைத்திட்டங்களையும் செய்ததை நான் அறியவில்லல் அந்த நிலையில் .மாகாண சபையின் ஆட்சி காலம் முடிவடைந்து விட்டது.
அந்தவகையில் மாகாணசபையை வினைத்திறனாக செயற்படுத்தாமல் விட்டுவிட்டு கல்வியின் வீழ்ச்சிக்க போரைக் காரணம் காட்டுவதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|