வடக்கின் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் வெளிமாவட்ட ஊழியர்கள் நியமிப்பு!

Saturday, July 13th, 2019

யாழ்ப்பாணம் மின்சாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்ற தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் நியமனமும், பணிப் பொறுப்பேற்பும் இரகசியமாக நடந்து முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த நான்கு தினங்களின் முன்னர் இலங்கை மின்சாரசபையின் யாழ் அலுவலகத்தில் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் சிங்களவர்கள். இருவரே தமிழர்கள்.

இதேவேளை வடக்கில் பல இளைஞர், யுவதிகள் பட்டதாரிகளாகவும், உரிய கல்வித்தகுதியுடனும் வேலையற்று இருக்கின்ற நிலையில் பிறமாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: