வடகில் மேலும் 3,000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, November 29th, 2021

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்காரணமாக மன்னார் மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டிப்பட்டது.

இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: