வங்கிகளில் பணம் அறவிடத் தீர்மானம் – குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் !

Saturday, March 7th, 2020

இலங்கையில் அனைத்து வங்கிகளில் குறைந்தபட்ச பணம் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேவைக் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அரசாங்க வங்கி உட்பட தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பை வைப்பதற்கு தவறியமையினால் சேவை கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவிக்ப்படுகிறது.

அவ்வாறு சேவை கட்டணம் அறவிடுவதற்கான அதிகாரம் வங்கிகளிடம் உள்ளதாக என இலங்கை மத்திய வங்கியிடம் விளக்கம் கோரப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய வங்கி அதிகாரி, டீ.எம்.ஜே.வை.பீ.பெர்ணான்டோ,

“அதற்கு தடையில்லை. வங்கிகளின் சேவை கட்டணங்கள் அவற்றின் சந்தைப்படுத்தல் பொறிமுறையால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்காக எங்களிடம் நிர்வாகம் ஒன்று இல்லை.

பொதுவாக, வங்கிகள் குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்துக் கொள்ளுமாறு கூறுகின்றது. அதற்கமைய வங்கிகள் பணம் அறவிடுகின்றது. அறிவிடும் கணக்கினை வங்கி பகிரங்கப்படுத்தவில்லை என்றால் தான் தவறாகும். அவ்வாறு அறிவிக்காமல் அறவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் மத்திய வங்கி ஆராய்ந்து பார்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய வங்கியில் குறைந்த பட்சம் 1500 ரூபாய் இருப்பு இருக்க வேண்டும். அவைத்து வங்கிகளுக்கு வங்கி கட்டணம் மாற்றமடையும் என தெரியந்துள்ளது.

இந்த குறைந்தப்பட்ச இருப்பு வைத்திருக்க முடியாத கணக்குகளில் 25 ரூபாய் மாதாந்தம் அறவிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: