வங்கக் கடலில் நிலநடுக்கம்!

Tuesday, February 12th, 2019

வங்கக் கடலில் இன்று(12) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு வடகிழக்கே 609 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.


யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 500 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தம்!
தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!
புதனன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி!
தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டை!
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!