லொத்தர் விற்பனை நாளைமுதல் ஆரம்பம் – 41 நாள்களில் 600 மில்லிஜயன் வருவாய் இழப்பு எனவும் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை தெரிவிப்பு!.

Friday, October 1st, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 41 நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகும் என தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ஓகஸ்ட் 21 ஆம் திகதி விற்பனைக்கு வரவிருந்த லொத்தர் சீட்டுகள் நாளை சந்தைக்கு வெளிவிடப்படவுள்ளன.

ஓகஸ்ட்டுக்காக அச்சிடப்பட்ட மீதமுள்ள லொத்தர்கள் பின்னர் சந்தைக்கு வெளிவிடப்படும் என்று லொத்தர் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் போது 41 நாட்களாக லொத்தர் சீட்டுகளை விற்க முடியாததால் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் சுமார் .600 மில்லியன் வருவாயை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: