ரஸ்யாவிலும் கொரோனா கைவரிசை !- அவசரகால நிலைமை பிரகடனம்!

Monday, April 13th, 2020

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையுல் அதிவேகமாக உயர்ந்து வருவதால் உலக நாடுகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரஸ்யாவில் கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் அவல நிலையில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன.

சீனா, வட கொரியா, ரஸ்யா போன்ற நாடுளில் எந்த விஷயம் நடந்தாலும் அது உலகிற்கு இலகுவில் தெரியாது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, அந்த நாடு நோய் தொற்று குறித்த உண்மையை உலக நாடுகளுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவுடன் தரைவழிப் போக்குவரத்து உள்ள நாடு ரஸ்யா. சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும்போது தனது எல்லையை மூடியது ரஸ்யா. அதன்பின் ரஸ்யாவின் செய்திகள் வெளியாவது குறைவாக இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை துவம்சம் செய்தது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில்தான் தற்போது கொரோனா ரய்ஸியாவிலும கால் பதித்திருக்கிறது. கொரோனாவின் தாக்கம் ஏனைய நாடுகளில் எவ்வாறு இருந்துவருகின்றது என்பதை உணர்ந்த ரஸ்யா தற்போது அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் மாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 15770 பேர் ரஷயாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 130 பேர் உயிரிழந்ததாவும் செய்திகள் வெளியாகியுள்ன.

இந்த நிலையில் ரஷியாவில் அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

Related posts: