ரஷ்ய தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு – இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!

Thursday, February 10th, 2022

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இடம் பெற்றது.

பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகைதந்த ரஷ்ய தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவினரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றதுடன் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த இரு தரப்பு கலந்துரையாடல் கொவிட்-19 பரவலை தடுக்க சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக பாதுகாப்பு செயலாளர் பி பி எஸ் சி நோனிஸ், இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு உதவிச் செயலாளர் ஹர்ஷ விதானராச்சி ஆகியோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: