ரஷ்யாவிற்கு செல்லும் ஜனாதிபதி !

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யாவிற்கு செல்லவுள்ளார்.
ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில் இவரது விஜயம் அமையவுள்ளது.
இதன்போது, இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், வர்த்தக நோக்கிலான கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.
அத்துடன், விஞ்ஞானம், தொழில்நுட்பவியல், கடற்றொழில், சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வி ஆகியன தொடர்பில் இருதரப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும் செல்லவுள்ளனர்.
1974ஆம் ஆண்டில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் இதுவே இலங்கைத் தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|