ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!

Tuesday, June 18th, 2019

நாடு முழுவதுமுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 44 Wi-Fi வலயங்கள் நிறுவப்படவுள்ளதுடன், அவற்றில் 22 Wi-Fi வலயங்கள் கொழும்பு மாவட்டத்தில் 14 ரயில் நிலையங்களில் நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், குறித்த இந்த திட்டத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கணை ரயில் நிலையம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 5 ரயில் நிலையங்களும் பதுளை மாவட்டத்தில் 5 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: