ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!
Sunday, February 24th, 2019ரயில்களில் பெண்களுக்கு பிரத்தியேகமாக தனியான பெட்டிகளை ஒதுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, 6 அலுவலக ரயில்களில் பெண்களுக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.
சமுத்திராதேவி, சாகரிக்கா உள்ளிட்ட 6 அலுவலக ரயில்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், பெண்களுக்காக மாத்திரம் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் எழுந்த பிரச்சினைகள் காரணமாக அந்நடைமுறை கைவிடப்பட்டது.
Related posts:
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது!
நாடுமுழுதும் 20 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி - எரிசக்தி அமைச்சர் கஞ்ச...
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...
|
|