யுக்திய சுற்றிவளைப்பு – இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவிப்பு!

Monday, March 11th, 2024

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதாளகுழு செயற்பாட்டை இல்லாதொழித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக இன்று முதல் பொலிஸாருக்கு மேலதிகமாக ராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: