யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு  பெற்றுக்கொள்ள முயற்சி!

Tuesday, April 12th, 2016

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகம் நேற்றைய தினம்(11) சிலரால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகஜர் கையளிப்பதற்கான அனுமதியை பெற்றுகொண்டு அலுவலகத்திற்கு பிரவேசித்த மக்கள் பிரதிநிதிகளும், சம்பந்தப்பட்டவர்களும் இவ்வாறு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டமை நேர்மையற்ற விடயம் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

எனவே எதிர்காலத்தில் பிரச்சினைகள் தொடர்பான மகஜர்களை சமர்பிக்க அதிகமானோர் கொண்ட குழுவாக வருவோரை மாவட்ட செயலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்க போவதில்லை எனவும் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்று தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் தொடர்பில் மாகாண ஆளுணருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: