கூட்டமைப்பினரை நிராகரித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

Wednesday, November 2nd, 2016

 

பொலிசாரால் சுட்டக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்ளச்சென்ற மாணவர் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறித்த பேச்சுவார்த்தையில் இணைத்துகொள்ள மறுப்புத்தெரிவித்து அவர்களை நிராகரித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு  குறித்த விடயத்தை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மட்டுமே கலந்துகொண்டிருந்த நிலையில் வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், ஏன் ஏனைய தமிழர் தரப்பு இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் ஊடகப்பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy

Related posts: