யாழ். மாவட்டத்தில் நேற்றையதினம் மட்டும் 109 பெருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, May 11th, 2021

இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 2 ஆயிரத்து 573 கொரோனா தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் யாழ். மாவட்டத்தில் மட்டும் 109 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில் –

நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே உள்ளனர். அந்த மாவட்டத்திலிருந்து மட்டும் 551 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்ததாக களுத்துறை மாவட்டத்தில் 362 பேரும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 321 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 184, குருநாகல் மாவட்டத்தில் இருந்து 177, காலி மாவட்டத்திலிருந்து 170, இரத்னபுரி மாவட்டத்தில் 128, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 109 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: