யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும் வழங்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாவட்டச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

அரசினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு இடர்கால நிதியாக வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிதியானது முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே யாழ் மாவட்ட ரீதியில் வழங்கப்பட்டுவருகின்றது.

அதிலும் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறுவோருக்கே  முதற்கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஏனைய பிரிவினருக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஆனால் யாழ் குடாநாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் பொது மக்கள் அவ்வாறு குழப்பமடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அரசினால் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பயணத் தடை அமுலில் உள்ள காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும்  அத்தியாவசியமான சில செயற்பாடுகளுக்கு பிரதேச மட்டங்களில் அனுமதியினை வழங்கியுள்ளோம் அதேநேரத்தில் மாவட்டங்களுக்கிடையே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சில அலுவலகங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக திறந்து இயங்கும்  நிலை காணப்படுகின்றது.

ஆகவே இந்த நிலையில் பொதுமக்கள் சலுகைகளை துஸ்பிரயோகம் செய்யாது  தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் பயணத்தடை யானது தற்பொழுது மேலும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது எனவே பொதுமக்கள் அதனை உணர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள்  தேவையாகவுள்ளது எனினும் அரசாங்கம் எவ்வளவு தடுப்பூசி வழங்குகின்றதோ அதனை உடனடியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: