யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, February 13th, 2021

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் நேற்றையயதினம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 3 ஆணையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் செயற்திறனை விரிவாக்கும் நோக்கிலும் பால்நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஆணையாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா ஃபெர்ணாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் ஏனைய ஆணையாளர்களாக நியமனம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: