யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை – வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவகாசம்!

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட மரக்கறிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரப் பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி பால்முரளி இதை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிற்பாடு பொலித்தீன் பயன்படுத்தப்படின் வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு!
தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!
கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!
|
|