காலநிலை சீர்கேடு;  டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு!

Tuesday, May 29th, 2018

2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு இலட்சத்து 80 ஆயிரம் சுற்றாடல் பகுதிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகதேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

இவற்றில் சுமார் 50 சதவீதமான சுற்றாடல் பகுதிகள் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழைக்குப் பின்னர், மீண்டும் டெங்குநுளம்பு பெருகக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் விழிப்புடன் தமது சுற்றாடல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மழைக்குப் பின்னர், கிணற்றை குளோரினிட்டு சுத்தம் செய்யவேண்டும். இதற்காக பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தொற்றுநோய்ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் அனில் திசாநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கொதித்தாறிய நீரை அருந்த வேண்டும். அதேபோன்று, காய்கறி மற்றும் பழ வகைகளை சுத்தப்படுத்தி, சமையலுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts:


7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை...
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை - இலங்கை வாகன இறக்குமதியாள...
யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் தொகுதி - நிர்மாணிக்கஏற்பாடுகள் இடம்பெற்...