யாழ். மத்திய கல்லூரி மாணவர் விடுதி அமைக்க ஜனாதிபதி நிதி வழங்குவதாக உறுதி!

Saturday, September 10th, 2016

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா  நேற்று (09) நடைபெற்றது. இதன்போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கள் கல்லூரியின் மாணவர் விடுதி நீண்ட காலமாக புனரமைக்காமல் சேதமடைந்துள்ளதாகவும், அதனை மீள அமைக்க வேண்டிய தேவையுள்ளதால், நிதியுதவி தேவைப்படுவதாக கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

a7ae6aff6e34553c25d113b70a1da831

Related posts: